கடலில் இப்படி செய்யலாமா.. நம்மூரில் மூளையே இல்லை சிலருக்கு.. இந்த வீடியோவை பாருங்கள் | What’s with us Indians and our total lack of survival skills? watch this west Bengal coast video

Spread the love

India

oi-Velmurugan P

கொல்கத்தா : எழுத்தாளர் ராகுல் ஸ்ரீனிவாஸ் என்பவர் ஒரு வீடியோவை பகிர்ந்து இருந்தார். அது பற்றி அவர் கூறுகையில், “மேற்கு வங்க மாநிலம் திஃகா கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவைப் பார்ப்பதற்கே மிகவும் வேதனையாக இருக்கிறது. நம்ம ஊர் மக்களுக்கு உயிர் பிழைப்பதற்கான அடிப்படைத் திறன்களே இல்லாமால் இருப்பதை கண்டு வேதனையாக இருந்தது. நம்ம மக்களில் சிலருக்கு மூளை இயங்கும் விதத்திலேயே ஏதோ ஒரு அடிப்படை கோளாறு இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சீறிப்பாயும் கடலுக்குள் தங்களைத்தானே தூக்கி எறிவது, தவறான திசையில் அதிவேகப் பாதையில் வாகனத்தை ஓட்டுவது, மற்றும் இருபுறமும் பார்க்காமல் சாலையைக் கடப்பது போன்ற தற்கொலைக்குச் சமமான, வேண்டுமென்றே செய்யும் செயல்களை வேறு எப்படித்தான் உங்களுக்கு விளக்குவது?

What s with us Indians and our total lack of survival skills watch this west Bengal coast video

நாம் எடுக்கும் ஒவ்வொரு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளும் ஏதோ யோசிக்காமல் செய்யும் ஒரு உடனடி எதிர்வினையாக மட்டுமே இருக்கிறது; அதில் மூளையின் பயன்பாடே இல்லையோ என்று தோன்றுகிறது. அதாவது மூளையே இல்லாதவர்கள் போல் செய்கிறார்கள்.

இப்போதுதான் ஒருவன் ஒரு குழந்தையைப் பிடித்துக்கொண்டு, அது ஏதோ ஒரு பூங்கா போல அங்கே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அவனுக்குப் பின்னால் இருக்கும் அந்தக் குழந்தைகளுக்கு 4 அல்லது 5 வயதுதானே இருக்கும்? என்ன ஒரு முட்டாள்தனமான மனிதர்கள் இவர்கள்!?” இவ்வாறு ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

ஏன் ராகுல் ஸ்ரீனிவாஸ் அப்படி கோபப்பட்டார்

அவர் பகிர்ந்திருந்த வீடியோவில் மேற்கு வங்க மாநிலம் திஃகா கடற்கரையில் அலைகள் ஆக்ரோஷமாக வந்து கொண்டே இருந்தது. அந்த அலைகளில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படுத்துக்கொண்டு குளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அலைகள் ஆக்ரோஷமாக வந்து அவர்களை இழுத்து சென்றது. போராடியே அனைவரையும் காப்பாற்றினார்கள். அலைகள் சற்றே வேகமாக வந்திருந்தால், ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது. குறிப்பாக படுத்துவிட்டு எழுந்திருக்கவே முடியாமல் இருந்த பெண் கண்டிப்பாக அலைக்கு இறையாகியிருப்பார். மக்களின் விடாமுயற்சி மற்றும் கடலே ஒருமுறை செய்த ஒரு உதவியால் அவர் உயிர் தப்பினார். அலை சற்றே மாற்றி அடித்திருந்தால் இன்று அவருடன் நான்கு ஐந்து பேர் உயிரிழந்திருப்பார்கள்.

இந்த வீடியோவில் கடற்கரையில் குளிக்கவே கூடாத இடத்தில் அவர்கள் குளித்திருப்பது தெளிவாக தெரிந்தது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி, சுற்றியுள்ளவர்களின் எச்சரிக்கையை மீறி ரீல்ஸ் மோகத்தில், திரில் அனுபவமாக மக்கள் பிரச்சனை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தவறு நடக்காத நிலையில், அவர்களுக்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆபத்தான அலைகளைப் பார்க்கும்போது “மற்றவர்களுக்குத்தான் ஆபத்து, எனக்கு எதுவும் ஆகாது, நான் கவனமாக இருப்பேன்” என்ற தவறான தன்னம்பிக்கையோடு கடலில் மக்கள் இறங்குவதே சிக்கலுக்கு காரணம் ஆகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிறு வயது முதலே “ஆபத்து மேலாண்மை மற்றும் கடல் அலைகளின் இயல்பு பற்றிப் பள்ளிகளிலேயே பாடம் கற்பிக்கிறார்கள்.

ஆனால் நம்மூரில் ஆபத்தைப் பற்றிய புரிதலை விட, “அந்த நேரத்தில் கிடைக்கும் ஒரு நொடி த்ரில் ” அல்லது “புகைப்படம்/ரீல்ஸ் எடுத்துவிட்டோம் என்ற ஆனந்தம்” மட்டுமே முக்கியமாகத் தெரிகிறது. அப்படியான திரில்லுக்கு ஆசைப்பட்டு தான் ஓடும் ரயில் முன்பு சில முட்டாள்கள் செல்பி எடுக்கிறார்கள். பாம்புடன் செல்பி எடுக்கிறார்கள். முதலையை எதிர்த்து நின்று வீடியோ போடுகிறார்கள். இவர்களின் ரீல்ஸ் மோகம், ஆபத்தை திரில் என்று நினைப்பது தான் பல தவறுகளுக்கு காரணம் ஆக இருக்கிறது. வீடியோவை நீங்களே பாருங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *