இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான வார ராசிபலன்! – Kumudam

Spread the love

மேஷம்

சீரியஸாக இருந்த நிலை மாறி சீரான நன்மைகள் வரும் கால கட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உரு வாகும். மனம்விட்டுப் பேசினால், மகிழ்ச்சி நிலைக்கும். பணிகளில் மேன்மை ஏற்படும். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். செலவுகளில் நிதானம் முக்கியம். குடும்ப விஷயங்களை பொதுவெளியில் பேசவேண்டாம்.உணவை முறைப் படுத்துங்கள்.கால்களில் சுளுக்கு வரலாம், நடப்பதில் நிதானம் தேவை. முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். வாராஹி வழிபாடு வளமை சேர்க்கும்.

ரிஷபம்

முயற்சிகள் பலன் தரும் காலகட்டம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தால், நிம்மதி இடம்பிடிக்கும். வாரிசு களால் பெருமை ஏற்படும். உறவுக ளிடம் வீண் உரசல் வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். சுப தடைகள் நீங்கும். பணியிடத்தில் தேவையற்ற ரோஷம் தவிருங்கள். பிறர் குறையைப் பெரிதுபடுத்த வேண்டாம். இரவுத் தூக்கத்தை முறைப்படுத்துங்கள். சமூக வலைதளங்களில் ரகசியம் பகிர வேண்டாம். கூரான பொருள்களில் நிதானம் முக்கியம். அடிவயிறு, இடுப்பு, நரம்பு உபாதைகள் வர லாம். பைரவி வழிபாடு, பசுமை சேர்க்கும்.

மிதுனம்

உழைப்பினல்உயரவேண்டிய கால கட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். தரல், பெற லில் அவசரம் வேண்டாம். வாரிசுகளிடம் அதீத கண்டிப்பு தவிருங்கள். குடும்ப விஷ யங்களில் அடுத்தவர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பணிபுரியும் இடத் தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். புதிய பொறுப்பு அதிகரிக்கும். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம். ஒற்றைத் தலைவலி, நரம்பு உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழி பாடு, ஆனந்தம் சேர்க்கும்.

கடகம்

திறமை வெளிப் பட்டு, நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தம்பதியர் இடையே இருந்த விரிசல்கள் நீங்கும். வாரிசு களுடன் மனம்விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் புதிய வரவும் அதனால் மகிழ்வும் ஏற்படும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். சில ருக்குப் புதிய வாய்ப்புகளும் ஏற்றமும் ஏற்படும். சமையலறையில் பட படப்பு, பரபரப்பு தவிருங்கள். நரம்பு, மூட்டு, சுளுக்கு உபாதை கள் வரலாம். மாரியம்மன் வழி பாடு, மங்களங்கள் சேர்க்கும்.

சிம்மம்

பொறுமையும் பொறுப்பு உணர்வும் தேவைப்படும் காலகட்டம். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடை பிடியுங்கள். உணவில் அதீதகாரம் தவிருங்கள். கர்ப்பிணிகள் சிகிச் சையில் அலட்சியம் வேண்டாம். பணிபுரியும் பெண்கள் மேலதிகாரிகளுடன் தர்க்கம் தவிருங்கள். திட்டமிட்டும் நேரடி கவனத்துடனும் செயல் படுங்கள். கையெழுத்திடுவதில் நிதானம் முக்கியம். பற்கள், அஜீரணம், அல்சர், உபாதை கள் வரலாம். மகாலக்ஷ்மி வழி பாடு, மகிழ்வு சேர்க்கும்.

கன்னி

நல்லவை அதிக ரிக்கும் காலகட்டம். வீட் டில் சுமுகப் போக்கு நிலவும். வாழ்க்கைத்துணைவருடன் விட்டுக் கொடுத்தல் நல்லது. வாரிசுகளிடம் ரோஷம் தவிருங் கள். பெற்றோர் பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். தரல், பெறலில் நிதானம் முக்கியம். பணிபுரியும் பெண்கள், திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்படுங்கள். உணவு, பானத்தில் கவனம் முக்கி யம். வாகனத்தில் வேகம் வேண் டாம். கழுத்து, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வர லாம்.பொன்னியம்மன் வழிபாடு, வாழ்வைப் பொன்னாக்கும்.

துலாம்

முயற்சிகள் பலன் தரத்தொடங்கும் காலகட்டம். குடும்பத்தில் சுமுகத் தென்றல் வீசத்தொடங்கும். வரவை சேமிக்கப் பழகுங்கள். உறவுகளால் ஆதாயம் கிட்டும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங் கள் கைகூடும். வழுக்கலான இடங்களில் நிதானம் முக்கி யம். அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்கால உயர்வுக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். அடிவயிறு, நரம்பு, இடுப்பு உபாதைகள் வரலாம். நாகதேவதை வழிபாடு நன்மை சேர்க்கும்.

விருச்சிகம்

திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய காலகட்டம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். வாழ்க் கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகளிடம் வீண் கோபம் வேண்டாம். பண வரவில் தடைகள் நீங்கும். பெற்றோர் உடல்நலம் சீரா கும். பணியிடத்தில் எச்ச ரிக்கையாக இருங்கள். கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப் பது நல்லது. ஆடை, ஆபர ணம் சேரும். தூக்க மின்மை, ஒற்றைத் தலைவலி, சளி உபாதைகள் வரலாம். வாராஹி வழிபாடு வளமை சேர்க்கும்.

தனுசு

சீரான நன்மைகள் வரக்கூடிய கால கட்டம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். ரத்த பந்த உறவுகளிடம் தர்க்கம் தகராறு வேண்டாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. செலவுகளில் சிக்கனம் தேவை. இளம் வயதினர் பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுங்கள். அலு வலகத்தில் இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். இருட்டான இடங்களுக்குத் தனியே செல்வதைத் தவிருங்கள். முக உறுப்புகள், முதுகு, தோள் பட்டை உபாதைகள் வரலாம். காளியம்மன் வழிபாடு, களிப்பு சேர்க்கும்.

மகரம்

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம். குடும்பத்தில் வசந்தக் காற்று வீசத்தொடங்கும். கடந்த கசந்த காலக் கதை களைப் பேசவேண்டாம். வரவு அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. தாய்வழி உறவுகளிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். பதவி, ஊதிய உயர்வு கை கூடும்.புதிய நபர்களிடம் நெருக் கம் வேண்டாம். பற்கள், கண், கால் உபாதைகள் வர வாய்ப்பு உண்டு. மீனாட்சியம்மன் வழி பாடு,வாழ்வை மின்னச் செய்யும்.

கும்பம்

வாழ்க்கையில் வசந்தம் வரும் கால கட்டம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தம்பதியர் இடையே நெருக்கம் உண்டாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பு கூடும். ஆடை, ஆபரணம் சேரும். மனம் மகிழும்படி வாரிசு வரம் கிட்டும். பல காலக் கடன்கள் பைசலாகும். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். சிலருக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும். தலைவலி, தூக்க மின்மை உபாதைகள் வரலாம். காமாட்சியம்மன் வழிபாடு, களிப்பு சேர்க்கும்.

மீனம்

நிம்மதியான சூழல் நிலவக்கூடிய காலகட்டம். சுற்றியிருப்போர் இடையே உங்கள் செல்வாக்கு உயரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தேவை யின்றித் தலையிட வேண்டாம். செலவுகளில் நிதானம் தேவை. விலை உயர்ந்த பொருட்கள் பத்திரம். அலுவலகத்தில் உங்கள் பெருமை உயரும். அதேசமயம், இடமாற்றத்தில் அவசரம் வேண்டாம். பிறர் குறையைப் பேசுவதைத் தவிருங்கள். அலர்ஜி, அல்சர், உணவு எதுக்களிப்பு வரலாம். பார்வதி வழிபாடு, பசுமை சேர்க்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *