International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. அதனை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா, சீனா உள்பட 4 நாடுகளின் கப்பல்கள் இனி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமாக செல்லலாம். இந்த நாடுகளின் கப்பல்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்த 4 நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் முடிவுக்கு வந்தாலும் கூட இன்னும் பதற்றம் தணியவில்லை. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது.
இதனால் ஈரான் தனக்கு சொந்தமான கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதன்மூலம் கடல்வழி வர்த்தகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா, சீனா, கத்தார், ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கலாம். இந்த நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என அறிவித்துள்ளது.
இதனை ஈரானின் சீனியர் அரசியல்வாதியான அமீர் ஹயாத் மொகத்தம் உறுதி செய்துள்ளார். இவர் ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை கமிட்டின் துணை தலைரவாக உள்ளார்.
இதுதொடர்பாக அமீர் ஹயாத் மொகத்தம் கூறுகையில், ”ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியா, சீனா, ஈராக், கத்தார் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விலக்கு கொடுத்துள்ளோம். இந்த நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக செல்கின்றன. இதனை அமெரிக்காவும் இடைமறிப்பது இல்லை” என்று கூறியுள்ளார்.