இனி சொந்த மண்ணில் பிரச்சனையில்லை.. படிக்கல், ஜுரலால் வந்த நம்பிக்கை.. சொன்ன மாதிரி செய்த கம்பீர்! | Gautam Gambhir: How Dhruv Jurel and Devdutt Padikkal Lead India’s Recovery in Asian Conditions

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

கொழும்பு: துருவ் ஜுரல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அபாரமான பேட்டிங் காரணமாக இந்திய அணி மீண்டும் வலுப்பெற தொடங்கியுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பின் சொந்த மண்ணிலேயே இந்திய அணி தோல்வி அடைந்த சூழலில், தற்போது ஆசிய மண்ணில் இந்திய அணியால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 503 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக தேவ்தத் படிக்கல் 117 ரன்களையும், துருவ் ஜுரல் 115 ரன்களும், ரிஷப் பண்ட் 63 ரன்களையும், சுப்மன் கில் 50 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலமாக இந்திய அணி வலுவான நிலைக்கு உயர்ந்துள்ளது.

Gautam Gambhir

கடந்த சில மாதங்களில் இந்திய டெஸ்ட் அணி மிகப்பெரிய மாற்றத்தை அடைந்து வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், இந்திய அணியின் பேட்டிங் மோசமாக காணப்பட்டது. குறிப்பாக நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கிய கருண் நாயர், சாய் சுதர்சன் ஆகியோர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

அதேபோல் ரிஷப் பண்ட் இடத்திற்கு முன் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் சர்ஃபராஸ் கானை களமிறக்க வேண்டும் என்று பலரும் பேசி வந்தனர். ஆனால் நம்பர் இடத்திற்கு தேவ்தத் படிக்கலையும், நம்பர் 7 இடத்தில் துருவ் ஜுரலையும் இந்திய அணி நிர்வாகம் களமிறக்கியது.

அதற்கேற்ப தேவ்தத் படிக்கல் பயிற்சி ஆட்டம் தொடங்கி 3 சதங்களை இலங்கை மண்ணில் விளாசி இருக்கிறார். இதன் மூலமாக புஜாராவுக்கு பின் நம்பர் 3 இடத்தில் ஆசிய மண்ணில் சிறப்பாக ஆடக் கூடிய பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. தேவ்தத் படிக்கலையும் ஸ்பின்னர்களுக்கு எதிரான ஃபிரெண்ட் ஃபூட் மற்றும் பேக் ஃபூட்டில் நன்றாக ஆடுகிறார்.

மறுபக்கம் துருவ் ஜுரல் 2 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். டவுன் தி ஆர்டரில் துருவ் ஜுரல் சேர்க்கும் ரன்கள் இந்திய அணியின் ஸ்கோரை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. இதனால் துருவ் ஜுரலுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் இனி ஆசிய மண்ணில் இந்திய அணி மீண்டும் ஆதிக்கத்தை தொடங்கும் என்று பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *