மொத்த வருவாயில் பாதியளவு கிரெடிட் கார்டு, யுபிஐ (UPI) போன்ற ஆன்லைன் முறைகளிலேயே வருகிறது. பெட்ரோல் போட வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பின்னணியையோ அல்லது அவர் தரும் பணத்தின் ஆதாரத்தையோ சரிபார்க்க உரிமையாளர்களுக்கு எந்த வழியும் இல்லை.
ஆனால், ஏதேனும் ஒரு பரிவர்த்தனை சைபர் குற்ற வழக்கில் சந்தேகத்திற்குரியதாக மாறும்போது, வங்கிகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி பெட்ரோல் பங்க்கின் முழு வங்கிக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். அதோடு, வழக்கு பற்றிய முழு விவரமும் தெரியாமல் உரிமையாளர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிப்பதும், அடைத்து வைப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து சைபர் குற்ற விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியுள்ள உரிமையாளர்கள், “‘டிஜிட்டல் முறையில் பணம் பெற்றதற்காகத் தங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவதை ஏற்க முடியாது. ஒருவேளை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளைப் பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்துவோம்” என TNPDA சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.