International
oi-Nantha Kumar R
பெய்ஜிங்: அமெரிக்கா – சீனா இடையே வளர்ச்சியில் கடும் போட்டி உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருநாடுகளும் மாறி மாறி காலை வாரிக்கொள்வது நடந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் சாப்ட்வேரை இனி பயன்படுத்த கூடாது என்று அரசு நிறுவனங்களுக்கு சீனா அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடான சீனா உலகில் உள்ள வல்லரசு நாடுகளில் ஒன்றாக உள்ளது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அதிகார போட்டி, யார் முதலிடம் என்பதில் தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது.

இதனால் தான் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு எதிராக சீனாவும் வேலையை காட்டி வருகின்றன.
சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை குறிவைத்து வரிகளை தீட்டினர். பதிலுக்கு அரியவகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்தியிருந்தது. இப்படியாக இருநாடுகளும் மாறி மாறி அடித்து கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது சீனா அதிரடியான முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைக் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி சீனா அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சீனாவின் அரசு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் சாப்ட்வேரை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதில் உள்நாட்டு சாப்ட்வேரை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது விண்டோஸ்க்கு பதிலாக லினக்ஸ் அடிப்படையிலான உள்நாட்டு ஓஎஸ்-ஸை பயன்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சென்றது. இந்த நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. இதனால் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ”மைக்ரோசாஃப்ட் மென்பொருளை நீக்குமாறு அரசு சார்ந்த சில நிறுவனங்களுக்கு சீன அரசு தகவல் அனுப்பி உள்ளது. இதில் எந்த குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்படவில்லை. இருப்பினும் கூட டேட்டா பாதுகாப்பு சார்ந்த விஷயங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவை பொறுத்தமட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது நாம் அனைவரும் பயன்படுத்துவது போல் சாதாரணமானது இல்லை. அமெரிக்க தனது விண்டோஸ் 10 சாப்ட்வேர் மூலமாக உளவு பார்க்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இதனால் விண்டோஸ் 10 கஸ்டமைஸ்ட் ஓஎஸ்ஸை சீனா பயன்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சீனாவின் சி அண்ட் எம் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் மைக்ரோசாஃப்ட்வேர் இடையே தனியாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. விண்டோஸ் 10 சாப்ட்வேர் சீனாவின் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் கூட தற்போதும் சீனா விண்டோஸ் வேண்டாம் என்று அரசு நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

