இன்று தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்தை கொண்டுவரும் முதலமைச்சர் விஜய்; திமுகவின் முடிவு என்ன?|Live Updates |Live Updates of Tamilnadu Assemly and Delimitation bill

Spread the love

தனித் தீர்மானமும், திமுகவின் நிலைப்பாடும்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, தொகுதி மறுவரையறைக்கு எதிராக இந்தியாவின் எந்த மாநிலத்தில் குரல் ஒலித்ததோ இல்லையோ, தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல் அதிகமாக இருந்தது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஐந்து மாநிலங்களின் முதலமைச்சர்களைச் சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்தினார்… தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்துக்கூட எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்.

ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சியும், காட்சிகளும் மாறிய பின், தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுக சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது. இந்த மசோதாவை எதிர்த்து விஜய் கடந்த 8-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார். ஆனால், அதில் திமுகவும், அதிமுகவும் கலந்துகொள்ளவில்லை.

விஜய், உதயநிதி ஸ்டாலின்

விஜய், உதயநிதி ஸ்டாலின்

திமுக – பாஜக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதனால் தான், திமுக இந்த விஷயத்தைப் பெரிதாக கையில் எடுக்கவில்லை என்கிற பேச்சும் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டாலும், திமுக ஒன்று வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்பு செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுகவிற்கு நெருக்கடி கொண்டு வரவே, இந்தத் தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து காய்களை நகர்த்துகிறது தவெக அரசு என்ற தகவல் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு பின் நடக்கும் வாக்கெடுப்பின் போது, தொகுதி மறுவரையறையில் திமுக என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது தெரிந்துவிடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *