மேஷம்:
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். இருப்பினும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும்.
ரிஷபம்:
பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முயற்சிகள் சாதகமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் அவற்றைச் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு பின்னர் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிக்கக்கூடும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.
கடகம்:
அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.
சிம்மம்:
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
கன்னி:
வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு பின்னர் நீங்கும். உறவினர்கள் வகையில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
துலாம்:
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.
விருச்சிகம்:
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு வருத்தம் தரும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படலாம். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் சஞ்சலம் ஏற்படக்கூடும்.
தனுசு:
மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். இருப்பினும், உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராக இருக்கும்.
மகரம்:
பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிக்கக்கூடும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அவற்றைச் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். இளைய சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பொறுமை அவசியம்.
கும்பம்:
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடன் கேட்டு நச்சரிப்பார்கள்.
மீனம்:
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைச்சல் ஏற்படலாம். மற்றவர்களுடன் வீண் சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும்.

