தொடர்ந்து எம்.எல்.ஏ ராஜேந்திரன் கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “25 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய கம்யூனிகேஷன் எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கின்றன.
இந்த மாமன்றத்தில் கொஞ்ச நாளாகவே உருவ கேலி, சாதி மற்றும் பெண்களைக் கேலி செய்தவர்கள், இப்போது மொழி கேலிக்கு வந்துவிட்டார்கள்.

கிறிஸ்தவம் எனக்கு ஒரு மொழி கற்றுக்கொடுத்திருக்கிறது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது.
நான் பைபிள் படித்திருக்கிறேன். நான் இப்படித்தான் பேசுவேன், என்னுடைய ஸ்டைல் இதுதான். எம்.எல்.ஏ ராஜேந்திரனுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது” என்று மரிய வில்சன் தெரிவித்திருக்கிறார்.