"இப்போது அவர் தமிழ்நாட்டின் 'ஜனநாயகன்' ஆகிவிட்டார்!" – பதவியேற்பு விழாவில் 'ஜனநாயகன்' தயாரிப்பாளர்!

Spread the love

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய்.

விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு, விஜய் ஆளுநரைச் சந்திக்க செல்கையில், இவருடன் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் பற்றியும் பேசியிருக்கிறார்.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவரின் வெற்றியை எதிர்பார்த்துதான் நாங்கள் ‘ஜனநாயகன்’ என்ற தலைப்பைப் படத்திற்கு வைத்தோம். எல்லோரும் ‘ஜனநாயகன்’ என்பது ஒரு திரைப்படம் என்று நினைத்தார்கள்.

ஆனால் இப்போது அவர் தமிழ்நாட்டின் ‘ஜனநாயகன்’ ஆகிவிட்டார்.” என்றவர், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் பற்றி, “மிக விரைவில். நாங்கள் சென்சார் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம்.

KVN கே.நாராயணா
KVN கே.நாராயணா

சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தை வெளியிடுவோம். தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் சாருக்கு எனது வாழ்த்துகள்.

ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. விஜய் சார் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *