`இப்ப தேவை 1 கோடி; ஆனா 10 ஆண்டுகள் கழித்து 1.79 கோடி தேவை’ பணவீக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தப்பிக்கலாம்

Spread the love

பணம் பத்தலை!

பணம் பத்தலை!

ஆனால், பணவீக்கம் என்கிற விஷயத்தை ரமேஷ் கணக்கில் கொள்ளவில்லை. இப்போது ஒரு கோடி ரூபாய் பணத்துக்கு இருக்கும் மதிப்பு, ஆண்டுதோறுமான பணவீக்கம் 6% என்கிற அளவில் இருக்கும்போது அடுத்த 5, 10, 15, 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவாக இருக்கும் தெரியுமா?

தற்போதைய மதிப்பு – ரூ.1 கோடி

5 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு – ரூ.74.73 லட்சம்

10 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு – ரூ.55.84 லட்சம்

15 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு – ரூ.71.73 லட்சம்

20 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு – ரூ.31.18 லட்சம்

ரமேஷ் அடுத்த 20 ஆண்டுகளில் சேர்க்க நினைத்தது ரூ.1 கோடி. ஆனால், 20 ஆண்டுகளில் அந்த ரூ.1 கோடியின் மதிப்பு ரூ.31.18 லட்சம் மட்டுமே. இந்த ரூ.31 லட்சத்தை வைத்து ரமேஷ் செய்ய நினைத்த பல செலவுகளை செய்ய முடியாது. 60 வயதாகிவிட்ட நிலையில், மேற்கொண்டு அதிகமான பணத்தையும் அவரால் சேர்க்க முடியாது. எனவே, 40 வயதில் பணம் சேர்க்கத் தொடங்கும்போதே பணவீக்கத்தைக் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை ஓரளவுக்குக் கணித்து, அந்த அளவுக்கான தொகையை ரமேஷ் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *