நான் ஒருபோதும் பிடிவாதமான அல்லது ஒத்துழைக்காத நடிகர் என்று பெயர் எடுத்ததில்லை. ‘இயக்குநரே கப்பலின் கேப்டன்’ என்று நம்புபவன்” என்றார்.
படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அடிக்கடி செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் 1984-ல் அரசியலில் நுழைந்தபோது சிறிது காலம் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார். ஆனால், மீண்டும் திரையுலகிற்குத் திரும்பிய பிறகு, நடிப்பை விட்டுவிடுவதைப் பற்றி அவர் ஒருபோதும் சிந்தித்ததில்லை.
இது குறித்து அமிதாப்பச்சனிடம் கேட்டதற்கு, தான் ஓய்வு பெறுவதை மக்கள் ஏன் அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். ”நான் ஏன் நடிப்பை கைவிடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்? மக்கள் ஏன் என்னை வேலையிலிருந்து ஓய்வு பெறச் செய்வதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்?” என்றும் கேட்டார்.
அத்துடன், நான் மரணத்தின் விளிம்பு வரை சென்று அங்கிருந்து மீட்கப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக யாரோ ஒருவர் என்னைப் பாதுகாத்து வந்திருக்கிறார்,” என்றும் அவர் தெரிவித்தார். 2026ம் ஆண்டு நிலவரப்படி அமிதாப் பச்சனுக்கு 4 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.