பல்லடம்: 10 லட்சம் மதிப்புள்ள 35 பன்றிகள் திருட்டு; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? | Palladam: 35 pigs worth ₹10 lakh stolen; how were the thieves caught?

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள கோடாங்கி பாளையத்தைச் சேர்ந்த கலமாணி என்பவர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி பன்றி வளர்ப்பு கூடத்தில் இருந்து 35 பன்றிகள் திடீரென மாயமாகியுள்ளன.

அதிர்ச்சியடைந்த கலாமணி, இது தொடர்பாக பல்லடம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பன்றிகள் திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர்.

பன்றி திருட்டு

பன்றி திருட்டு

பின்னணி குறித்து தெரிவித்த பல்லடம் காவல்துறையினர், “பன்றி பட்டிக்குள் கடந்த செப்டம்பர் 14-ம் தேதியன்று நள்ளிரவில் புகுந்த இரண்டு நபர்கள், அங்கிருந்த 35 பன்றிகளை தார்ப்பாய் போட்டு மூடி, பிக்கப் வாகனத்தில் ஏற்றி திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 பன்றிகளையும் மற்றொரு பண்ணையில் விற்பனை செய்திருக்கிறார்கள். பன்றிகள் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திருட்டிற்குப் பயன்படுத்திய பிக்கப் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பன்றி திருட்டு வழக்கில் கைதானவர்களில் முதன்மை குற்றவாளியான மணிகண்டன் மீது ஏற்கனவே பெருந்துறை காவல் நிலையத்தில் பன்றி திருட்டு வழக்கும், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளன. மற்றொரு கைதியான சங்கர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை‌க் கண்டுபிடித்தோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *