இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவருக்கு வயது 95.
வயது மூப்பு காரணமாக இன்று இவர் இயற்கை எய்தியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

இந்தியாவின் முதல் டைம் டிராவல் படமான “ஆதித்யா 369′ படத்தை இயக்கியவர் இவர்தான்.
இதுமட்டுமல்லாமல், கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவை தென்னிந்திய சினிமாவுக்குப் பெரியளவில் பரிச்சயமில்லாத சமயத்திலேயே, அப்படியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.