தேர்தல் ஆணையம்: “ஸ்டாலின் முதல் மம்தாவரை தோல்வி தற்செயல் அல்ல” – அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு! | Election Commission: “From Stalin to Mamata, the defeats are no coincidence” – Abhijit Deepke’s analysis!

Spread the love

ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அரவிந்த் கெஜரிவாலின் தொகுதியில் 40,000 வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் 4,000 முதல் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பினராயி விஜயன் வெற்றி பெற்றிருக்க வேண்டிய சூழலில், கேரளாவில் நடந்த வாக்காளர் நீக்கத்தால் அவராலும் மீண்டும் முதலமைச்சராக முடிவில்லை.

இந்தத் தோல்விகள் தற்செயலாக நடந்ததாகக் கருதமுடியாது. உத்தவ் தாக்கரேவின் கட்சி உடைக்கப்பட்டு, அதன் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் மிகச் சுறுசுறுப்பாகப் பறித்து, ஒரு “ஷெல் கம்பெனி’ போலச் செயல்பட்ட போலித் தரப்பிடம் வழங்கியது.

அபிஜித் தீப்கே

அபிஜித் தீப்கே

அத்துடன், ஆளுங்கட்சி அதிகாரத்தில் நீடிப்பதை உறுதிசெய்யத் தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது. எங்களுக்கு எதிர்க்கட்சிகள் மீதோ அல்லது வேறு எந்தக் குறிப்பிட்ட கட்சி மீதோ தனிப்பட்ட பாசம் எதுவும் இல்லை. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளையே முழுமையாக அழித்துவிட்டால், அதை எப்படி ஜனநாயகம் என்று அழைக்க முடியும்? அது எப்படிச் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலாகும்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *