இரண்டாவது முறையாக ஆலியா பட்; ஆனால், கண்டுகொள்ளாத போட்டோகிராஃபர்ஸ்! – வைரலாகும் வீடியோ Alia Bhatt Steps Out for the Second Time—But Photographers Pay No Heed! — Video Goes Viral

Spread the love

அந்த வீடியோவில் ஆலியா பட், ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்துகொண்டிருக்கிறார். ரெட் கார்பெட்டில் அவர் புகைப்படக் கலைஞர்களுக்காகப் போஸ் கொடுத்திருக்கிறார்.

ஆனால், அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் ஆலியா பட்டை கவனிக்காமல், வேறு நபர்களைப் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள்.

இப்படியான ஒரு விஷயம் நிகழ்ந்தவுடன் அங்கிருந்த மொபைல் போன் புகைப்படக் கலைஞர்களுக்குப் போஸ் கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார் ஆலியா பட்.

ஆலியா பட்

ஆலியா பட்

இந்நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள், “ஒரு சர்வதேச மேடையில் இவரை யாருக்கும் தெரியவில்லை என்பது மிகப்பெரிய அவமானம்.” என்றும், “புகைப்படக் கலைஞர்கள் அவர்களுடைய சினிமாவைச் சேர்ந்த நட்சத்திரத்தைப் புகைப்படம் எடுப்பதில் சீரியஸாக இருந்திருக்கலாம்” என்றும் பதிவிடும் அவர்கள், “ஒரு சிறிய வீடியோவை வைத்துக்கொண்டு ஒருவர் அடைந்திருக்கும் புகழைக் கேலி செய்வது தவறு. அவர் அந்தச் சூழலை மிகவும் பக்குவமாகவும், தன்னம்பிக்கையுடனும் கையாண்டிருக்கிறார்” என ஆலியா பட்டிற்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *