தமிழக முதல்வராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாகத் தவெக-வை மக்கள் உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள். பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் பதவியை ஏற்றுக் கொண்டார் விஜய்.
அதனைத் தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுப் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விஜய்-க்குச் சினிமா துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கரும் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், “இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் விஜய்-க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The people’s wish…
— Shankar Shanmugham (@shankarshanmugh) May 13, 2026
மக்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. ஒரு மாஸ் தொடக்கத்தோடு உங்கள் பயணம் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் பிரதர்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் விஜய் ‘நண்பன்’ படத்தில் நடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தில் விஜய்யைத்தான் முதலில் கதாநாயகனாக நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அப்போது அது நடக்கவில்லை.