இரண்டு துண்டான கார்.. 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி.. எதிரே வந்த லாரியால் நேர்ந்த கதி | 7 People died: Car splits into two after truck collide head on it in Gujarat

Spread the love

India

oi-Nantha Kumar R

காந்தி நகர்: காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. லாரியுடன் மோதிய வேகத்தில் கார் இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் அதில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர்.

7-people-died-car-splits-into-two-after-truck-collide-head-on-it-in-gujarat

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் – காவ்டா நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே கார் வந்து கொண்டிருந்தது. இந்த கார் புஜ் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று லாரியும், காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் இரண்டு துண்டாக நொறுங்கியது. காரில் பயணித்தவர்கள் அதில் மாட்டிக்கொண்டனர்.

உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி காரில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் காரில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானது தெரியவந்தது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து 7 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் சவுராவ்சிங் ஜொஸ்பால் சிங் நேகி (வயது 32). அவரது மனைவி சவிதா. இந்த தம்பதியின் 3 மாத மகள் சிவிகா, அதேபோல் ரிங்கி நிதின், அவரது மகள் வாமிகா, ராஜேஷ்சிங் ராவத் அவரது 7 வயது மகள் ரக்‌ஷிதா என 7 பேர் இறந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் ராணுவத்தில் பணியாற்றிவ ருகின்றனர். இதனால் இந்திய ராணுவ அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொண்டனர். இந்த காவ்டா பகுதியில் அக்டோபர் 9 ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகினர். அடுத்த ஒன்றரை மாதத்துக்குள் நேற்று மீண்டும் 7 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *