உங்கள் பெயரை சொல்லி நாங்கள் மக்கள் பணி செய்தால்தான் நன்றாக இருக்கும் என்றோம். நான் செகண்ட் இயர் ஸ்டூடண்ட் போன்றவன். தாமு அண்ணன் சரவணன் அண்ணன் போன்றோர் எங்களை விட சீனியர்கள். ‘இளைய தளபதி க்ரூப்ஸ்’ என பெயர் வைத்து படிப்படியாக மன்றம் மூலம் வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு மன்றம் போர்டு திறக்க வேண்டுமானால், 25 பார்ம் நிரப்ப வேண்டும். மரக்கன்று நட்டு, பேனா, நோட்டு, புத்தகம் கொடுத்து தண்ணீர் பந்தல் திறந்து ரத்தத்தானம் வைத்து நாடி நரம்பு ரத்தமாக ஊறி மன்றத்திலிருந்து வளர்ந்து வந்திருக்கிறோம். நாங்கள் நேராக இங்கே வந்து உட்காரவில்லை. எங்களின் வெற்றியை பார்க்கிறவர்கள், எங்களின் முயற்சியை பார்ப்பதில்லை. நாங்கள் மின்னி மறையும் மின் மினி பூச்சி இல்லை. இன்னும் இன்னும் எழுந்து வரும் பீனிக்ஸ் பறவை’ என்று பேசியிருந்தார்.
இதே அமைச்சர்தான் தன்னுடைய மானியக்கோரிக்கையின் போது ‘AM, PM பார்க்காமல் உழைக்கும் தலைவா…’ என முதல்வரை ஏகத்துக்கும் புகழ, மறுநாளே முதல்வர் தன்னை யாரும் புகழக் கூடாது என சபாநாயகரிடம் நோட் போட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.