இவன் இன்னும் திருந்துல மாமா! மகேந்திரனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….. – Kumudam

Spread the love

மின்வெட்டு தொடர்பாக சர்ச்சைகுரிய வகையில்   கருத்து தெரிவித்து விமர்சனத்திற்குள்ளான மாஸ்டர் மகேந்திரன் மன்னிப்பு கேட்பதாக கூறி வெளியிட்ட வீடியோ நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன், சமீபத்திய நேரலையில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார். புதிய அரசு அமைந்து குறுகிய காலமே ஆன நிலையில் பல்வேறு பிரச்சினைகள் நீடிப்பதாகக் கூறிய அவர், மின்தடை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குமின்சாரம் இல்லையென்றால் என்ன?” என்ற சர்ச்சைக்குரிய பதிலை அளித்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய மகேந்திரன் நீங்கள் ஏன் எல்லாவற்றையும் கேள்வி கேட்கிறீர்கள் ஒரு ஆறு மாதம் காலம் எந்த கேள்வியும் கேட்காமல் இருங்கள் என்று தற்போதைய அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளார். மைக் முன்னாடி வந்து நின்றுகொண்டு கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா?” அதற்குப் பதிலாக மக்கள் சூரிய ஆற்றல் அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார். மேலும் மக்கள் தனது சொந்த வீட்டிலிருந்தே நேரடியாக மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மிகவும் அலட்சியமாக பதில் கூறியுள்ளார். மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் குடியிருப்பாளர்களின் உணர்வுகளுக்கு மிகவும் இரக்கமற்றதாக அவரது கருத்துக்கள் இருப்பதாகப் பல பயனர்கள் விமர்சித்தனர். மகேந்திரனின் இந்த கேலிக்கையான பேச்சு மக்களின் மத்தியில்  மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் கேலி கிண்டல்களை தொடர்ந்து சூரிய மண்டலம் என்பதற்கு  பதிலாக சூரிய ஆற்றல் என்று கூறியதால் இவரின் பேச்சை தற்போது நெட்டின்சன்கள் கலாய்த்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

பேசுவதையெல்லாம் மேடையில் பேசிவிட்டு தற்போது நல்ல பிள்ளை போல் தன் கருத்து தவறாக பரப்பட்டுள்ளது என்று நான் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சோலார் பவர் இருந்தால் நம் நாடு ஒரு சிறந்த முன்னேற்றத்தை காணும் என்ற நோக்கில் தான் கூறினேன். முதலமைச்சர் விஜய் பதவியேற்கும் போது ஆறு மாதம் கால அவகாசம் கேட்டிருந்தார் அதனை மனதில் வைத்து தான் 6 மாதத்திற்கு யாரும் கேள்வி கேட்கிதீர்கள் என்று கூறினேன்.எனது கருத்துகள் தவறான முறையில் மக்களிடம் சென்றடைந்துள்ளது. உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *