ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு செக்; சீனாவிற்கு நிதி கொடுத்தால் வங்கிகளுக்குத் தடை |America Targets Banks Funding Chinese Iran Oil Purchases

Spread the love

ஒரு பக்கம் அமெரிக்கா போர் தொடுத்தும், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டும் ஈரானுக்கு நெருக்கடி தந்து வருகிறது. ஆனால், இன்னொரு பக்கம், ஈரானிடம் இருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து நிதி உதவி செய்து வருகிறது.

இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சீனா மீது கடும் அதிருப்தி.

இந்தச் சூழலில் அமெரிக்காவின் கருவூலத் துறை, அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, ஈரானிய எண்ணெய் வாங்க சீனா நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அல்லது உதவும் அமெரிக்க வங்கிகள் மீது இரண்டாம் நிலை தடைகள் பாயும்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

சீனாவைப் பொறுத்தவரை, அதன் அரசாங்கம் சார்ந்த எண்ணெய் நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாது.

“டீபாட் ரிஃபைனர்ஸ் (Teapot Refiners)’ என்று அழைக்கப்படக் கூடிய சிறு, தனியார் எண்ணெய் நிறுவனங்கள்தான் ஈரான் எண்ணெய்யைப் பெரும்பாலும் வாங்குகின்றன.

அமெரிக்காவின் அறிக்கையில், “ஈரான் ஏற்றுமதி செய்யும் 90 சதவிகித எண்ணெய்யை சீனாதான் வாங்குகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *