முதலில் புரிந்துகொள்ள வேண்டியது ஒப்பீடு என்பது தவறு அல்ல. அது முன்னேற்றத்திற்கும் உதவலாம். ஆனால், அது நம்முடைய மதிப்பை நிர்ணயிக்க ஆரம்பித்துவிட்டால், அங்கேயே ஒரு எல்லை உருவாக்க வேண்டும்.
மாற்றம் வெளியில் இருந்து வராது… அது உங்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். நம்மை நாமே கவனிக்க ஆரம்பிப்பது முக்கியம். ‘நான் இப்போது யாருடன் என்னை ஒப்பீடு செய்கிறேன்?’ என்று கேட்க ஆரம்பித்தாலே, ஒரு விழிப்புணர்வு உருவாகும். அந்த விழிப்புணர்வே மாற்றத்தின் முதல் படி.
அடுத்தது, தனிப்பட்ட அடையாளத்தை மீண்டும் உருவாக்குவது. ‘எனக்கு என்ன பிடிக்கும்?’, ‘என்ன மாதிரியான வாழ்க்கை நான் வாழ வேண்டும்?’ என்ற கேள்விகளுக்கு பதில் தேட ஆரம்பிக்க வேண்டும். மற்றவர்களின் அளவுகோலை வைத்து நம்மை அளக்காமல், நம்முடைய அளவுகோலை உருவாக்க வேண்டும்.
சிறிய சாதனைகளைக் கூட கவனித்து கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நேற்று இருந்த நம்முடன் இன்று இருக்கும் நம்மை ஒப்பிட ஆரம்பித்தால், நம்பிக்கை மெதுவாக திரும்பும்.

மற்றவர்களைப் பார்த்து, ‘அவரைப் போல ஆக வேண்டும்’ என்பதற்குப் பதிலாக, அவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? என்று மாற்றிக் கொள்ளலாம். இந்த ஒரு மாற்றமே ஒப்பீட்டை அழுத்தத்திலிருந்து வளர்ச்சியாக மாற்றும்.
எப்போதும் நீங்கள் யாருடைய பெட்டட் வெர்ஷனாக மாற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் ஒரிஜினல் வெர்ஷனாக இருந்தாலே போதும். மற்றவர்களின் வேகத்திற்கு ஓட வேண்டிய அவசியமில்லை. உங்களின் வேகத்திற்கு ஏற்ப வெற்றிக் கோட்டை உருவாக்குங்கள்” என்று விரிவாக விளக்கினார்.
தொடர்ந்து பேசுவோம்!
வாசகர்களே இந்த பிரசனைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…
வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். digital@vikatan.com என்ற மின்னஞ்சளுக்கு ‘ பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!