ஈரான் எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா அனுமதி; இந்தியாவுக்கு என்ன பலன்?|Iran Oil Is Back: What It Means for India’s Energy Needs

Spread the love

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன… முக்கிய முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அப்படி நேற்றைய சந்திப்பில் ஈரான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்கலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான லைசன்ஸையும் ஈரானுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா.

இந்த லைசன்ஸ் வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி வரை செல்லுபடியாகும்.

ஈரான் - அமெரிக்கா

ஈரான் – அமெரிக்கா

ஏன் இந்த நகர்வு?

போரை நிறுத்துகிறோம் என்று அமெரிக்காவும், அணுசக்தி ஆயுத தயாரிப்பை நிறுத்தி வைக்கிறோம் என்று ஈரானும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தையும், பேச்சுவார்த்தையையும் இன்னும் நம்பகமாக மாற்ற அமெரிக்கா இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிற்கு ப்ளஸ்?

எது எப்படியோ, ஈரான் எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவது இந்தியாவிற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

இந்தியா கிட்டத்தட்ட 90 சதவிகித எண்ணெயை இறக்குமதி தான் செய்கிறது. இப்போது ஈரான் போரினால் இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *