ஈரான் போர் ஒப்பந்தம்: இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் கடும் கண்டனம்! | A rift has erupted between the US and Israel over the Iran deal issue.

Spread the love

இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான இடாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir), “அமெரிக்காவின் இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் கட்டுப்படாது. சர்வதேச அழுத்தங்களுக்கு நாங்கள் பணிய மாட்டோம்” என்றார்.

இந்த நிலையில், சமீப நாட்களாக அதிபர் ட்ரம்பும் நெதன்யாகு மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இஸ்ரேல் என்ற நாடு உருவானதற்கே உரிமை கோரும் ட்ரம்ப், நெதன்யாகுவை “பைத்தியக்காரர்” என்று வர்ணித்தார். பேச்சுவார்த்தைகளின் போது இஸ்ரேலை ஓரங்கட்டிய ட்ரம்ப், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

நெதன்யாகு

நெதன்யாகு
Prime Minister of Israel | X

இதற்கிடையில், புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து முதன்முறையாகப் பேசிய நெதன்யாகு, “இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகள் கருதி, தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தொடர்ந்து நீடிக்கும். எங்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்ட அமெரிக்க நண்பர்களுடனான உறவைப் பேணுவது முக்கியம், அவர்களின் உதவியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்” என்றார். போரை முழுமையாக நிறுத்தவும் லெபனானின் இறையாண்மையை மதிக்கவும் கோரும் அமைதி ஒப்பந்தத்தை நெதன்யாகுவின் இந்த அறிக்கை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *