கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் சென்றிருக்கிறார்.
2017-ம் ஆண்டு ட்ரம்ப், சீனா சென்றிருந்தார். அதன் பிறகு, இப்போது தனது இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சீனா சென்றிருக்கிறார் ட்ரம்ப்.
இதைத் தாண்டியும், இந்தப் பயணத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. ஈரான் போர் நடந்து வரும் சூழலில், சீனா சென்றிருக்கிறார் ட்ரம்ப்.
2018-ம் ஆண்டு அமெரிக்கா விதித்த தடையால், பிற உலக நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. ஆனால், எதற்கும் அசராமல் சீனா மட்டும் தொடர்ந்து ஈரானிடம் எண்ணெய் வர்த்தகம் செய்து வந்தது

ஈரான் போர் நடந்துகொண்டிருந்தபோது கூட, சீனாவிற்கு ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் சென்றுகொண்டிருந்தது.
ஒரு நாள், “ஈரானுடன் பேச்சுவார்த்தை நன்கு போய்கொண்டிருக்கிறது’ என்றும், அடுத்த நாள், ‘ஈரான் மீது தாக்குதல்’ என்றும் எப்படி இந்தப் போரை நிறுத்துவது என்று ட்ரம்ப் முழித்துகொண்டிருக்கிறார்.
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் ‘மிட்-டேர்ம்’ தேர்தல் (செனட் தேர்தல்) நடக்க உள்ளது. அதற்குள் இந்தப் போரை முடிப்பதுதான் ட்ரம்பிற்கு நல்லது. அதனால், அவர் ஈரான் போரை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால், அவருக்கு அதற்கான வழி தான் தெரியவில்லை.