
ஈரான் மோதல் பெரும்பாலும் எரிசக்தி சந்தைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும், அதன் தாக்கம் தற்போது எதிர்பாராத வழிகளில் பல்வேறு தொழில்துறைகளிலும் பரவி வருகிறது.
எரிபொருள் முதல் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் வரை, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் விலைகளை உயர்த்தி, அவை கிடைப்பது குறித்த கவலைகளை எழுப்புகின்றன; தற்போது ஆணுறைகள் போன்ற பொருட்கள்கூட இந்த நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஆண்டுக்கு சுமார் 5 பில்லியன் ஆணுறைகளை உற்பத்தி செய்யும் மலேசியாவைச் சேர்ந்த கரெக்ஸ் நிறுவனம், தனது விலைகளை 30 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள், தடைபட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் உயர்ந்த சரக்குக் கட்டணங்கள் ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு காரணம் என அந்நிறுவனம் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகளாவிய ஆணுறை உற்பத்தியில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கை கரெக்ஸ் நிறுவனம் வகிப்பது குறிப்பிடதக்கது.