ஈரோடு:மதுபோதையில் லாரியில் மோதிச் சென்ற ஓட்டுநர், துரத்திச் சென்று மடக்கிப்பிடத்த துணிச்சல் பெண்மணி! -erode women scooty accident goes viral .

Spread the love

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒருவர், நேற்று மாலை ஸ்கூட்டியில் சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பு அருகில் சென்றுக் கொண்டிருக்கையில், பின்னால் வந்த லாரி ஒன்று பெண்ணின் ஸ்கூட்டி மீது மோதியிருக்கிறது.

அதில் நிலைத்தடுமாறிய அந்த பெண் ஸ்கூட்டியுடன் கீழே விழுந்திருக்கிறார். சுதாரித்து எழுவதற்குள் எதுவும் நடக்காதைப் போல விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து ஓட்டிச் சென்றிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அந்த லாரியை பின்தொடர்ந்துச் சென்று சில கிலோமீட்டர்களில் மடக்கிப்பிடித்திருக்கிறார்.

துணிச்சல் பெண்மணி

துணிச்சல் பெண்மணி

லாரியின் குறுக்கே ஸ்கூட்டியை நிறுத்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். விபத்தை ஏற்படுத்திச் சென்ற அந்த லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததுடன் மிரட்டல் தொனியில் பேசியதால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரச் செய்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த காவல்துறையினர், லாரியை ஓரமாக நிறுத்தச் செய்துவிட்டு ஓட்டுநரை அழைத்துச் சென்றுள்ளனர். மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை பெண் ஒருவர் ஸ்கூட்டியில் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வைரலாகி வருகின்றன.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *