”குழந்தைங்க வெறும் வாக்கு கேட்கும் Tools தானா?.. அவங்களுக்கு பாதுகாப்பு எங்கே?” – உதயநிதி சாடல்..! – Kumudam

Spread the love

இதுதொடர்பாக, உதயநிதி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.  

வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் – பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.

சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது – ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது – சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை..

இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.

ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை. 

அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல – மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.

இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று,  மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது” என்று பதிவிட்டுள்ளார். 

2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள் உரையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளிடம் வாக்கு கேட்பது போல பேசினார். அதாவது குழந்தைகளான நீங்கள் எப்படி உங்களுக்கு சாக்லேட் வேண்டும் என்றால் அடம் பிடித்து சாக்லேட் வாங்குவீர்கள். அதுபோல  விஜய் மாமாவுக்கு ஓட்டு போடச் சொல்லி உங்களது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட அனைவரிடமும் அடம் பிடியுங்கள் என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்தது அந்த குழந்தைகளை விஜய் மறந்துவிட்டார் என்றும்,  வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர் விஜய், குழந்தைகள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் எனவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *