ஈரோடு: "கிட்னியை விற்று கடனைக் கட்டு" – எஸ்.பி அலுவலகத்தில் கதறிய பெண்; பாஜக நிர்வாகி கைது

Spread the love

ஈரோடு மாவட்டம் கொங்கு ஸ்கூல் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான சுகுணா. அசோகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடம் 2024-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக வட்டிக்கு பணத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார்.

வட்டியுடன் கடன் தொகையைத் திரும்ப செலுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், கடன் தொகையை முழுவதுமாகத் திரும்ப செலுத்தியும், மீட்டர் வட்டி என்கிற பெயரில் கூடுதல் தொகையைக் கேட்டு கிருஷ்ணகுமார் மிரட்டுவதுடன் ஒரு கிட்னியை விற்று கடைனை அமைக்குமாறு வற்புறுத்தி வருவதாகக் கூறி ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று காலை புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வட்டி தொழிலில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகுமாரைக் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார்

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், “சுகுணாவின் கணவர் இறந்த நிலையில், பண தேவைக்காக பா.ஜ.க நிர்வாகி கிருஷ்ணகுமாரிடம் 2 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைத் திரும்பக் கொடுத்திருக்கிறார். மீட்டர் வட்டி கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்.

தன்னிடம் பணம் இல்லையென பெண் கூறியிருக்கிறார். கிட்னியை வாங்க ஆள் இருக்கிறார்கள். மருத்துவமனையும் தெரியும். கிட்னியை விற்று கடைனை அமைக்குமாறு வற்புறுத்தி யிருக்கிறார். கந்துவட்டி கொடுமை வழக்கில் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *