ஈரோடு: பள்ளி மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் கைதான சமூக அறிவியல் ஆசிரியர்!| -erode government school teacher sexual abuse 4 girls student pocso case

Spread the love

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் 45 வயதான விஜயசாரதி. ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியராயாக பணியாற்றி வந்திருக்கிறார். பள்ளியில் பயிலும் 13 வயது மாணவிகள் நால்வருக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் பாலியல் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த நான்கு மாணவிகளும் தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.

கைதான ஆசிரியர் விஜயசாரதி

கைதான ஆசிரியர் விஜயசாரதி

இதனைத் தொடர்ந்து மகளிர் காவல்துறையினர் மற்றும் குழந்தை நல அலுவலர்களிடம்‌ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் அடிப்படையில் குழந்தைகள் நல குழுவினர் பள்ளிக்குச் சென்று ரகசியமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து‌, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஆசிரியர் விஜயசாரதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஆசிரியரின் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *