‘ஈவில்ஸ், ஈவில்ஸ்’ன்னு டெவில்ஸ் எங்களைப் பார்த்து சொல்றாங்க, ஆனா.!’- ஆக்ஷனோடு உரையை முடித்த விஜய் | cm vijay speech at tn assembly about dmk and udhayanidhi

Spread the love

டாஸ்மார்க்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை அடித்தனர். அதெல்லாம் தற்போது இல்லை. இது மன்னராட்சி இல்ல. இது மனசாட்சி உள்ள மக்களாட்சி.

எதிர்க்கட்சியினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ், கலாசாரம் என்று சொல்லி இரட்டை வேஷம் போடுபவர்கள் நாங்கள் இல்லை. தமிழ் எங்கள் உயிர்நாடி என்பதில் உறுதியாக இருப்போம்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

மாநில உரிமைகளில் எப்போதும் உறுதியாக இருப்போம். அதேசமயம் அரசியல் வேறு, ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை வேறு. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

எங்களுக்கு பாடம் எடுப்பதாகச் சொல்லி உங்கள் வேஷங்களை நீங்களே கலைத்து கொள்கிறீர்கள். அதை மறந்துவிடாதீர்கள். அதேபோல நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எங்களை “ஈவில்ஸ்’, ‘ஈவில்ஸ்’, என்றார். ‘ஈவில்ஸ்’ என்பதை டெவில்ஸ் பேசக் கூடாது. அவர்கள் இருந்திருந்தால் ஒரு ஆக்ஷன் இங்கு பண்ணிருப்பேன். எல்லாரும் வெளிநடப்பு பண்ணிவிட்டார்கள். இருந்தாலும் செய்கிறேன்” என்று கூறி ஆக்ஷனோடு பேச்சை முடித்துகொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *