உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு – பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

Spread the love

ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது…

“கடந்த 2026 ஜூலை 19 அன்று மாலையில், ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘எம்.வி கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தச் சம்பவம் நடந்த போது, கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 மாலுமிகள் இருந்தனர்.

அறிக்கை
அறிக்கை

கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைனில் உள்ள நமது இந்தியத் தூதரகம் இந்தச் சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிடத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்த இந்தியர் விரைவில் முழுமையாகக் குணமடையப் பிரார்த்திக்கிறோம்.

இந்தியா இதுபோன்ற தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது, அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மற்றும் வர்த்தகச் சுதந்திரத்தைத் தடுப்பது ஆகியவை கடுமையான கண்டனத்திற்குரியவை என்றும், இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்துகிறது”.

இந்தியா கண்டன அறிக்கையில் ரஷ்யா என்கிற பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், இந்த அறிக்கை காட்டமாகவே உள்ளது.

மோடி - புதின்
மோடி – புதின்

பல ஆண்டுகளாக, இந்தியா, ரஷ்யா இடையே நல்ல நட்பு நீடித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் இந்த உறவில் சிறு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வந்தாலும், இந்தியாவை சேர்ந்த எந்த மாலுமிகளும் இதுவரை பாதிப்பிற்குண்டானது இல்லை.

எம்.வி கோல்டன் லியோ தாக்குதலில் நான்கு இந்தியர்கள் இறந்ததே முதல்முறை.

இதையடுத்து இந்திய அரசு இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகப் பிரதிநிதியை அழைத்து தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் கூறப்படுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *