மலாக்கா ஜலசந்தி கவனம்: அமெரிக்கா புதிய தந்திரம்?|US-Indonesia Deal Sparks Malacca Strait Strategy Debate

Spread the love

“என்ன பார்வை நம்ம பக்கம் திரும்புது?’ என்பதுபோல, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து மெல்ல மெல்ல அமெரிக்காவின் கண்கள் மலாக்கா ஜலசந்தி பக்கம் திரும்புகிறது போலும்.

தென் கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கிறது மலாக்கா ஜலசந்தி. இதன் பக்கத்து நாடுகள் மலேசியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர்.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றும் இந்த ஜலசந்தியின் பக்கத்து நாடுகள் மட்டுமல்ல. அந்த மூன்றும் இணைந்து தான் மலாக்கா ஜலசந்தியின் பாதுகாப்பு முதல் போக்குவரத்து வரை அனைத்தையும் நெறிமுறைப்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா, இந்தோனேசியா

அமெரிக்கா, இந்தோனேசியா

நேற்று முன்தினம் (ஏப்ரல் 13), அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தோனேசியாவின் வான்வெளியில் அமெரிக்காவின் விமானப்படை இயங்கலாம்.

மேலோட்டமாக பார்த்தால், இது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தமாகத் தெரியலாம். ஆனால், இந்த ஒப்பந்தம் மலாக்கா ஜலசந்தியை அமெரிக்கா கண்காணிப்பதற்கும், அங்கே இயங்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கலாம்.

மலாக்காவிற்கு மிக அருகில் தான் இருக்கிறது இந்தோனேசியா. அதனால், அங்கிருந்து மலாக்கா ஜலசந்தியை அமெரிக்கா கண்காணிப்பது மிக எளிதாக இருக்கும்.

இது தேவையான நேரத்தில், மலாக்கா ஜலசந்தியில் அமெரிக்கா களமிறங்க கூட உதவலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *