மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்று எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். இருப்பினும், தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குப் பிறகு தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்துவிடுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்று மனதில் அவ்வப்போது குழப்பங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத செலவுகள் காரணமாக சிலர் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்களால் குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பிள்ளைகள் தொடர்பாக வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்று எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கலாம். அதே நேரத்தில் சகோதரர்கள் தொடர்பாக சில வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பாக்கி வசூலாக வாய்ப்பு உள்ளது.
கடகம்:
கடக ராசியினர் இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தடைகள் விலகும். துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய கடனைத் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு கிடைப்பதுடன், கொடுத்த கடனும் திரும்ப வரலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்று தேவையான பணம் கையில் இருக்கும். சில காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் நிறைவேற்றிவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் மூலம் வரும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை; அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்று உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதேசமயம் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை முழு ஒத்துழைப்பு அளிப்பார். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்களின் தொடர்பு மனதுக்கு உற்சாகம் தரும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்று காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை நீங்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்ளலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்கள் மூலம் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்று காரியங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைத்தாலும், திடீர் செலவுகளால் கையிருப்பு குறையலாம். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரம் ஓரளவு லாபகரமாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்று செயல்களில் திட்டமிடுதல் அவசியம். கடன் தொடர்பான விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சில தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடல்நிலை மேம்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உள்ளது. மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதேவேளையில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். உறவினர்கள் தொடர்பான சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொந்தரவுகள் நீங்கும்.

