எந்தெந்த திதிகளில் என்னென்ன செய்யலாம்?
பிரதமை: இந்த திதிக்கு அதிதேவதை அக்னி. வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கு உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம்.
துவிதியை: இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன். அரசுக் காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.
திருதியை: இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி). குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்பக் காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம்.
சதுர்த்தி: எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். முற்கால மன்னர்கள் படையெடுப் புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆக, போட்டிகளில் வெற்றிபெற இந்த திதி நாளை தேர்வு செய்யலாம். நெருப்பு சம்பந்தமான காரியங்களைச் செய்ய உகந்த திதி இது. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.
பஞ்சமி: இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது. மேலும், எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப் பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும்.
சஷ்டி: இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். முருகனை வழிபட உகந்த நாள்.
சப்தமி: இதன் அதிதேவதை சூரியன். பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.
அஷ்டமி: இதற்கு அதிதேவதை ஆவார். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்)
நவமி: இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள். சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் தொடங்கலாம். தீயபழக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள், அவற்றில் இருந்து மீள்வதற்கான மருத்துவ முயற்சிகளை இந்நாளில் தொடங்கலாம்.
தசமி: இந்தத் திதிக்கு எமதருமனே அதி தேவதை. எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். ஆன்மிகப் பணிகளுக்கு உகந்த நாள் இது. பயணம் மேற்கொள்ளலாம். அரசுக் காரியங்களில் ஈடுபடலாம்.
ஏகாதசி: இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.
துவாதசி: அதிதேவதை விஷ்ணு ஆவார். மதச்சடங்குகளில் ஈடுபடலாம்.
திரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணிய லாம். எதிர்ப்புகள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
சதுர்த்தசி: காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள். ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. இந்த நாளில் வழக்கு, புதிய பங்குதாரர்களை இணைத்தல், புதிய வேலைக்கான முயற்சிகளில் இறங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
பௌர்ணமி: இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். ஹோம, சிற்ப, மங்கல காரியங் களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். சகல ராசிக்காரர்களும் இந்த நாளில் அம்பாளை வழிபட்டு நன்மை அடையலாம்.
அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுக ளைச் செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ள லாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.
இனி, உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட திதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வோம்.