உச்ச நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஓவைசிக்கு சல்யூட்; உ.பி போலீஸின் குளறுபடி! நடந்தது என்ன?| UP Cops Mistake Asaduddin Owaisi For Supreme Court Judge, Give Him Guard Of Honour

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அளிக்கப்பட வேண்டிய காவல்துறை அணிவகுப்பு மரியாதையை, அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு உ.பி போலீஸார் தவறுதலாக வழங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2027 உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துடன் இணைந்து “சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா’ கூட்டணியை ஓவைசி அமைத்திருக்கிறார்.

இந்தக் கூட்டணி ஆலோசனை மற்றும் செய்தியாளர் சந்திப்புக்காக சஹாரன்பூர் சென்றிருந்த ஓவைசி, அங்குள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதே நாளில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அதே சர்க்யூட் ஹவுஸுக்கு வரவிருந்திருக்கிறார். இதற்காக நீதிபதியை வரவேற்கக் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையுடன் தயாராக நின்று கொண்டிருந்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *