சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழீழ விடுதலைப் பாடகர் தேனிசை செல்லப்பாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாதக-வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக-வின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நோ கமென்ட்ஸ், இதைப்பற்றிப் பிறகு பேசலாம்” எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாகவும், திருச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றத்தை உருவாக்குவோம் எனக் கூறியிருந்தது தொடர்பாகவும் சீமான் பேசியிருக்கிறார்.

சீமான் பேசுகையில், “மதுரையில் பேசும்போது நம்முடைய மாண்புமிகு முதல்வர், “மோடி ஜி, இந்த மீனவர்களுக்காக நீங்கள் கச்சத்தீவை மட்டும் மீட்டுக் கொடுத்துடுங்க, அது போதும்’ என்று கோரிக்கை வைக்கிறார்.
சரி, இது தொடர்பாகத் தற்போதைய மீன்வளத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள், ‘சார், இந்த கச்சத்தீவை மீட்பது குறித்து உங்கள் கருத்து என்ன?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அங்கிருந்த அதிகாரி முன்கூட்டியே மூன்று முறை ‘நோ கமென்ட்ஸ்’ என்று கூறுகிறார்.