உதயநிதி கைது நடவடிக்கைக்கு பிறகு, தனது எக்ஸ் (X) தளத்தில் நிவேதா பெத்துராஜ், “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்” என்ற திருக்குறளை மட்டும் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் வேறு எந்த விளக்கமும் இடம்பெறவில்லை.
https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?s=20
இந்தப் பதிவு உதயநிதி கைது சம்பவத்துடன் தொடர்புடையதா அல்லது பொதுவான கருத்தாக பகிரப்பட்டதா என்பது குறித்து நிவேதா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், பதிவு வெளியான நேரம் காரணமாக சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. சிலர் உதயநிதி மற்றும் நிவேதாவை இணைத்து வெளியான சர்ச்சைகளுக்கான மறைமுக பதிலாகப் பார்க்க, மற்றவர்கள் இதற்கு அரசியல் தொடர்பு இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த நிவேதா பெத்துராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்‘ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரைச் சுற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அவற்றை அவர் மறுத்தும் விளக்கம் அளித்தும் இருந்தார்.
தற்போது உதயநிதி கைது விவகாரம் பேசுபொருளாக இருக்கும் சூழலில், எந்த விளக்கமும் இல்லாமல் திருக்குறளை மட்டும் பகிர்ந்துள்ள நிவேதா பெத்துராஜின் பதிவு இணையத்தில் வைரலாகி, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

