சூர்யா – ஜோதிகா தம்பதி, தங்களின் திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார்கள். அதையொட்டி அவர்கள் இருவரும் இணைந்து “ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்கள்.
அந்தப் பேட்டியில் அவர்களுடைய குழந்தைகள் பற்றியும், அவர்களின் ஆர்வம் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்கள்.
அதில் சூர்யா பேசுகையில், “நாங்கள் வீட்டில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை” என்றாதும் ஜோதிகா, “குழந்தைகளுக்கு அதில் ஆர்வமே இல்லை. யாராவது புகைப்படம் எடுத்தால் கூடச் சங்கடப்படுவார்கள்.
நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் ரொம்பத் தெளிவான குழந்தைகள் என ஒரு தாயாக நான் பெருமையுடன் சொல்வேன். சூர்யாவின் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது. ஒரு அருமையான குடும்பம்.