உதயநிதி பிரச்சாரத்தில் தர்ம சங்கடம்.. தவெகவின் ச்சீப்பான அரசியல்.. பரந்தாமன் பரபர புகார் | TVK Doing Cheap Politics Says DMK Candidate Parandhaman

Spread the love

Tamilnadu

oi-Pavithra Mani

செங்கல்பட்டு: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மதுராந்கத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது உரிய போக்குவரத்து ஏற்பாடை செய்யாமல், தவெக மலிவான அரசியல் செய்வதாக திமுக வேட்பாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எதிர்க்கட்சி தலைவர் மக்களை சந்தித்து வாக்கு கேட்க வரும்போது, போலீஸ் பாதுகாப்பு செய்ய வேண்டும். அவர் வாகனம் செல்வதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இது தேசிய நெடுஞ்சாலை உள்ள பகுதி. மக்கள் கஷ்டப்படும் வகையில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவராலும் வர முடியவில்லை.

Udhayanidhi Stalin

மலிவான அரசியல்

போக்குவரத்து ஒத்துழைப்புக்கு காவல்துறை எதுவும் செய்யவில்லை. கண்ணுக்கு எட்டிய வரை காவல்துறையை காணவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் வந்த அனைவரின் வாகனமுடம ஸ்தம்பித்துவிட்டது. வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் ரூட் மேப் கொடுத்தும் எதுவும் செய்யவில்லை. கடைசி இடத்தில் அவர் பேச முடியாத நிலை ஏற்பட்டது. வண்டிகள் தேங்கி நின்றது. வேறு வழியில்லாமல் எதிர் ரோட்டில் சென்று பேசி வேண்டியதாகிவிட்டது.

தவெக ரொம்பவும் மலிவான அரசியலை செய்கிறது. உங்களின் முதலமைச்சர் வரும்போது, ஆளே இல்லாத டீ கடையில் ஆயிரம் போலீஸாரை நிறுத்தினீர்கள். இங்கு நபர்கள் முக்கியமில்லை. பொது மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம். பொதுத்தேர்தலின்போது தான் அரசு நிர்வாகம் தேர்தல் ஆணையம் வசம் செல்லும். இடைத்தேர்தலில் மாவட்ட நிர்வாகம் தான் பொறுப்பு. தவெக அரசு திமுக மீது அவப்பெயர் ஏற்படுத்த இப்படி செய்துள்ளனர்.

தலைவர் பிரச்சாரம்

எல்லா கட்சி வேட்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பளித்து நடவடிக்கை எடுப்பது தான் காவல்துறை வேலை. வேட்பாளரான நானே தேசிய நெடுஞ்சாலை செல்லும்போது பயந்து போகிறேன். போலீஸ் யாருக்கு பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 3 ஆம் தேதி எங்கள் தலைவர் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள். காவல்துறை, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுராந்தகம் பகுதியில் அதிக விபத்துகளாகிறது. சாலையை கடக்க மக்கள் சிரமப்படுகிறார்கள். எனக்கு பிரச்சாரம் செய்வோரே விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். காலை, இரவு பீக் ஹவர்களில் காவல்துறை நிச்சயம் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசு இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *