அந்த கொடுமையான மனநிலையில் நான் இருந்த போது நான் பார்த்த ‘ஜானி’ படத்தில் வந்த ‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே’ பாடல் பல வித மாறுதல்களை தந்தது , ‘ஸ்ரீதேவி’ அவர்கள் ஆஆஆஆஆஆ ,ஆஆஆஆஅ, ஆஆஆஅ,ஆகாஆகாஆகா அன்ஆ அன்ஆ அன்ஆ அன்ஆ ஆஆஆஆஆ காற்றில் , எந்தன் கீதம்’ என்று பாட துவங்கும் போது அதனுள் என் தனிமையை பொருத்திப்பார்த்து விட்டேன்.
‘அலைபோல் நினைவாக’ என்ற வரிகள் வரும் அந்த பாட்டில் ஆனால் அந்த படத்தில் ‘ஸ்ரீதேவி – ரஜினி’ அவர்களுக்கும் காதல் ஏற்ப்பட்டு பின் தான் பிரிந்திருப்பர் . ஆனால் ‘அலைபோல் நினைவாக ‘ என் நினைவில் வைத்துக்கொள்ள எனக்கு அப்போது ஒரு நண்பர்கள் கூட பழகிய நாட்கள் ஏதும் என்னிடம் இல்லை. இயற்க்கை ஒரு வருடத்திற்க்கு 365நாட்கள் (லீப்பியர் வந்தால் 366) கொடுத்திருக்கிறது ஆனால் அந்த 365,366 நாட்களில் எனக்கு ஒரு நாட்கள் கூட நண்பர்களோடு கழித்த ஒரு நாள் என்று எதுவும் இருந்ததில்லை எனக்கு .
‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே’ பாடல் பல வருடங்கள் எனக்கு தனிமை போக்கியாக இருந்தது அந்த பாடல். அப்பாடல் முடியும் போது ‘ஸ்ரீதேவி’ அவர்களை தேடி ‘ரஜினி’ வந்து விடுவார். பல நாள் ‘ரஜினையை’ பிரிந்து இருந்த ‘ஸ்ரீதேவியின்’ தனிமை அங்கே அனைந்து இருக்கும்.
என் விடியல் துவங்கும் என் அலாரம் முதல் என் கைப்பேசியின் ரிங்க்டோன் என்று எல்லாமே ‘இளையராஜா’ அவர்கள்தான் இருக்கிறார்.
மெல்ல இலக்கியங்களுக்குள் ஆர்வமாக மூழ்க ஆரம்பித்த உடன் வாழ்க்கை மீதான புரிதலில் என் நண்பர்கள் இல்லாத என் தனிமையில் இருந்து மெல்ல இயல்பு நிலைக்கு வந்தேன்.
உலக புகழ் பெற்ற நடிகர் ‘வில் ஸ்மித்’ அவர்களின் ஒரு வாழ்க்கை தத்துவம் இருக்கிறது “எந்த மனிதர்களையும் துரத்தாதீர்கள் , உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் , உங்களுக்கான மனிதர்கள் உங்களை தேடி வருவர் உங்களோடு பயணிப்பர்” என்று ….
எனக்கான நண்பர்களை வெகு சிலரை இயற்கை எனக்கு தேர்ந்தெடுத்து தந்திருக்கிறது எனக்கு , அவர்களோடு நான் பயணித்து வருகிறேன் இப்போது ‘காற்றில் எந்தன் கீதம் ‘ பாடலை அவ்வப்போது கேட்கிறேன் .
ஆனால் இப்போது என் நண்பர்களோடு கூடும்போது ஒரு பாடலில் வரும் வரி என் மனதில் வந்துகொண்டே இருக்கும் திரும்ப திரும்ப.
‘பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே…