மைசூரில் நடந்த அரசு விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் பிரதமர் மோடி முன்னிலையில், `காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “அந்த முதல்வரின் உறுதியான முடிவு குறித்து இந்த மாநில முதல்வரிடம் கேள்வி கேளுங்கள். அதே காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைத்து ஆட்சி நடத்துவது யார்? தண்ணீர் தரவே மாட்டேன் என்கிற கட்சியுடன் உங்களால் எப்படி கூட்டு வைக்க முடிகிறது?
உரிமையைப் பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து இங்கு எதைக் காப்பாற்றப்போகிறீர்கள்? நியாயமாக யோசித்தால், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலம் இதுவா? அதுவா? அப்படியென்றால் அவர்கள் யாருடன் இருப்பார்கள்? எனவே, இதெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் நான் ஜீரோ…. ஹீரோவிடம் கேளுங்கள்.