NZ vs IND: 'இந்தத் தோல்வி எனக்கு கவலையை ஏற்படுத்திருக்கு, ஏன்னா.!'- கௌதம் கம்பீர் வருத்தம்

Spread the love

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியிருக்கிறார்.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பே ஓவலில் நேற்று (நவம்பர் 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய கௌதம் கம்பீர், ” 90 ரன்களுக்குள் ஆட்டமிழப்பதை நினைத்து கவலையடையாமல் இருக்க முடியவில்லை.

ind vs nz
ind vs nz

இதுபோன்ற ஆடுகளங்களில்தான் நாங்கள் எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளோம். அதனால், இந்தத் தோல்வி எனக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடைய மிகப் பெரிய கவலை இந்திய அணி ரன்கள் குவிக்காதது கிடையாது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் 26 அல்லது 27 ஓவர்களில் ஆட்டமிழந்ததுதான் எனக்கு மிகவும் கவலையளித்தது.

முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 35 அல்லது 40 ரன்கள் எடுத்தால் போதுமானது. ஆனால், நாங்கள் குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

ind vs nz
ind vs nz

மாட் ஹென்றி அபாரமாக பந்துவீசினார். அவர் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் தொடர்ச்சியாக ஸ்டம்புகளையும், பேடுகளையும் குறிவைத்து சிறப்பாக பந்துவீசினார். இதனை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஃபீல்டிங்கில் நாம் கேட்ச்சுகளை தவறவிட்டோம்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *