உறவை புதுப்பிக்க மறுப்பு; மாஜி காதலியை அலுவலகத்திற்குள் ஓடஓட விரட்டி 20 முறை குத்திக்கொன்ற வாலிபர்

Spread the love

காதல் தோல்விகள் சில நேரங்களில் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. இதனால் கொலை போன்ற கொடூர செயல்களில் இறங்கி விடுகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை அலுவலகத்திற்குள் புகுந்து குத்திக்கொலை செய்துள்ளார்.

மொகாலியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டிம்பிள் என்ற பெண் வேலை செய்து வந்தார். அவர் நேற்று மாலை 7.40 மணிக்கு அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அங்கு அப்பெண்ணின் முன்னாள் காதலன் ஹர்விந்தர் மான் வந்தார்.

அவர் அலுவலகத்திற்குள் வந்து டிம்பிளிடம் வாக்குவாதம் செய்தார். ஹர்விந்தர் மான் அப்பெண்ணிற்கு பின்புறம் நின்று கொண்டிருந்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து டிம்பிளை பின்புறத்தில் குத்தினார். உடனே அவரிடமிருந்து தப்பிக்க அப்பெண் தப்பித்து அலுவலகத்தில் இருந்து வெளியில் ஓட முயன்றார். ஆனால் அலுவலகத்தின் கதவுக்கு அருகில் டிம்பிளை ஹர்விந்தர் மான் பிடித்துக்கொண்டார்.

அவர் அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து சரமாறியாக கத்தியால் குத்தினார். அதனை தடுக்க சில ஊழியர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. வெறித்தனமாக அப்பெண் மீது ஹர்விந்தர் மான் கத்தியால் சரமாறியாக குத்தினார். மொத்தம் 20 முறை அவ்வாறு குத்தினார். இதில் அப்பெண் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். உடனே ஹர்விந்தர் மான் அப்பெண் வேலை செய்த இடத்திற்கு சென்றார். அங்கு நின்று கொண்டு தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.

அலுவலகத்தில் இருந்தவர்கள் இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் டிம்பிள் ஏற்கனவே இறந்திருந்தார். ஆனால் மான் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீஸார் கூறுகையில்,”மான் மற்றும் டிம்பிள் ஒரு தனியார் நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் ஒன்றாகப் பணிபுரிந்தனர். இந்த நேரத்தில், அவர்கள் நண்பர்களாகி, ஒரு உறவில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் தங்கள் உறவை மீண்டும் புதுப்பிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை – அவரை வருத்தம் மற்றும் மன உளைச்சல் அடைந்து அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்”என்று தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *