நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை (cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் “All India merit list” மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா?
2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி. ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது.
ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு.