உறவை முறித்த `ஆசிரியை’யான காதலி; மாணவர்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்று விபரீத முடிவெடுத்த இளைஞர்!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் பாத்திமா (26). இவர் மொகமத் (27) என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் மொகமத்துடனான உறவை முறித்துக்கொண்டார். இதையடுத்து பாத்திமா மீது மொகமத் கோபத்தில் இருந்தார். மொகமத் பள்ளிக்கு பேக் ஒன்றுடன் பாத்திமாவைப் பார்க்க வந்தார். அவர் ஆசிரியை பெயரை சொல்லி அவரை பார்க்க வேண்டும் என்று கூறி ஒரு மாணவனை அனுப்பி வைத்தார். அந்த மாணவன் பாத்திமாவிடம் சென்று இது குறித்து தெரிவித்தார். உடனே பாத்திமாவும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

மொகமத் பாத்திமாவை பள்ளியின் முதல் மாடியில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றார். இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அதனை பள்ளி ஊழியர் ஒருவரும் பார்த்துக்கொண்டிருந்தார். பாத்திமாவும், மொகமத்தும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தான் கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்து மொகமத் துப்பாக்கியை எடுத்து பாத்திமாவின் தலையில் சுட்டார். இதில் அப்படியே பாத்திமா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

பாத்திமாவை இழுத்து செல்லும் மொகமத்

பாத்திமாவை இழுத்து செல்லும் மொகமத்

அடுத்த நிமிடமே மொகமத்தும் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது நடந்தது. இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகம் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தது. போலீஸார் விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் மொகமத் பாத்திமாவை கட்டாயப்படுத்தி மாடிக்கு அழைத்துச்சென்ற காட்சியும், அதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவிப்பதும் தெளிவாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக நேரில் பார்த்த மாணவர்கள் தெரிவித்தனர். பட்டப்பகலில் பள்ளியில் நடந்த இச்சம்பவம் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *