உள்துறைச் செயலாளர் மணிவாசன் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு! |Several IAS Officers, Including Home Secretary Manivasan, Transferred in Tamil Nadu.

Spread the love

உள்துறைச் செயலாளர் மணிவாசன் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களின் பட்டியல்

புதிய உள்துறைச் செயலாளராக கார்த்திக் நியமனம்.

உள்துறைச் செயலாளர் மணிவாசன் நில நிர்வாக ஆணையராக நியமனம்.

தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக், உள்துறைச் செயலாளராக நியமனம்.

மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமனம்.

நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், வேளாண் துறை செயலாளராக நியமனம்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்; மின் உற்பத்திக் கழக தலைவராகவும் இவர் செயல்படுவார்.

ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம்.

செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக நியமனம்.

குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம்.

தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *