உ.பி: மனைவியை சேரில் கட்டிவைத்து எரித்த கணவர்… எலும்புக்கூடாக மீட்ட போலீஸ் – அதிர்ச்சி சம்பவம்!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம், கன்னௌஜ் மாவட்டத்தில் ஜகாபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோனம். இவரது கணவர் சுக்பிர் சிங். இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. சுக்பிர் ஹரியானாவில் வேலை செய்து வந்தார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். தனது மனைவிக்கு உள்ளூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சுக்பிர் சந்தேகப்பட்டார். சோனம் தான் விரும்பும் நபருடன் சென்று வாழ விரும்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து தொடர்ந்து தனது மனைவியை சுக்பிர் சிங் கண்காணித்துக்கொண்டே இருந்தார்.

இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண பஞ்சாயத்தும் நடந்தது. இந்த பஞ்சாயத்தில் தனது திருமணம் தாண்டிய உறவை முறித்துக்கொண்டு கணவருடன் சேர்ந்து வாழ்வதாக சோனம் உறுதியளித்தார். இதனால் சோனம் காதலித்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இந்நிலையில் இன்று காலை மீண்டும் சோனம் மற்றும் சுக்பிர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுக்பிர் தனது மனைவியை பிடித்து இருக்கை ஒன்றில் கட்டி வைத்தார்.

பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தனது குழந்தைகள் இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைத்த பிறகு வீட்டுக்குள் சென்றபோது சோனம் எலும்புக்கூடு மட்டும் இருக்கையில் இருந்தது. அதனை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இது குறித்து வழக்கு பதிவு செய்து சுக்பிர் சிங்கை தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *