“ஊருக்கு போக நினைச்சப்ப கண்ணுல பட்டார் சௌத்ரி சார், இப்ப நல்லாருக்கேன்”- இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் | nanjil anbazhagan shared his memories with producer r b choudary

Spread the love

எதிர்பார்க்கவே இல்லை உடனே வரச் சொல்லி பதில் வந்தது. அதே மெரினா போய் என்னை அறிமுகப்படுத்திகிட்டு பீச்ல பார்த்தது வரை சொல்லி, ‘காமராசு’ படத்தின் கதையைச் சொன்னேன். உடலுறுப்பு தானம் தொடர்பான அந்தக் கதை அவருக்கு உடனே பிடிச்சுப் போச்சு..

‘உங்க குருநாதர்கிட்டயே சொல்லி விஜய்யை கமிட் செய்யுங்க, படத்தைப் பண்ணலாம்’னு சொன்னார்.

காமராசு படம்

காமராசு படம்

ஆனா எனக்கு எஸ்.ஏ.சி சார் கிட்ட போக தயக்கம். அவர்கிட்ட இருந்து வந்துட்ட சூழலில் ஓ.கே சொல்வாரான்னு தோணுச்சு. அதனால நான் ஏற்கனவே மனசுல நினைச்சு வச்சிருந்த முரளி கிட்டப் போய் சொன்னேன். அவருக்கும் கதை பிடிச்சுப் போக, உடனே மனைவியைக் கூப்பிட்டு எங்கிட்ட ஐம்பதாயிரம் ரூபாய் தரச் சொன்னார்.

தயாரிப்பாளர்தானே சம்பளம் தரணும்னு சொன்னதும், இது நான் விருப்பப் பட்டு தர்றதுனு கட்டாயப்படுத்தி வாங்கிக்கச் சொன்னார்.

பிறகு சௌத்ரி சார்கிட்ட வந்து கதைக்குக் கொஞ்சம் மெச்சூர்டான முகம் வேணும்கிறதால முரளிகிட்டப் பேசினேனு தயங்கியபடியே சொன்னேன். அதனால ஒண்னுமில்ல, பண்ணலாம்னு சொல்லி, ஹீரோயினுக்காவது  இந்தப் பொண்ணு சரியா இருக்கான்னு பாருங்கனு லைலா போட்டோவைக் கொடுத்தார். ஹீரோ விஷயத்துல நானே முடிவு செய்துட்டதால அந்த இடத்துலயே லைலாவை ஓகே சொல்லி பேசி கமிட் செய்தோம்.

கதை பிடிச்சிருந்தா யார் என்ன தெரியாத இயக்குநர்களுக்கும் வாய்ப்பு தர்றதோட அவங்களுக்கு முழுச் சுதந்திரமும் தந்து படத்தைத் தயாரிப்பார். எனக்கு அந்த ஒரு படம் மூலம்தான் அறிமுகமானார்.

அதன் பிறகு நான் அரசியலுக்கு வந்து இன்னைக்கு சென்னையிலேயே செட்டில் ஆகிட்டாலும் அன்னைக்கு அவரைச் சந்திச்சது மட்டுமே என் வாழ்க்கையின் திருப்பு முனைனு சொல்வேன்’’ என நெகிழ்கிறார் இவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *