`எங்கள் முதல்வர் விஜய் பாணியில் சொல்லட்டுமா?’ – பெண் ஆட்சியர் விவகாரத்தில் தவெக எம்எல்ஏ சொன்ன பதில் | TVK MLA’s response regarding the issue involving a female District Collector

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி கனிமொழியும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய வந்திருந்த எம்.எல்.ஏ அருள் விக்னேஷிடம், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, “அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. ஏன் இப்படி ஒரு பொய்யான தகவலை சோஷியல் மீடியாவில் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

அப்படி உண்மையாக நடைபெற்றிருந்தால் என்ன நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்கட்டும். எங்கள் சி.எம் சார் பாணியில் சொல்ல வேண்டுமானால், இக்னோர் தி நெகட்டிவ். தவறான தகவலுக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? அது உண்மையாக நடந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தவறான தகவலைப் பரப்புகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *